உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

சிவகிரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-04-28 09:43 GMT   |   Update On 2022-04-28 09:49 GMT
சிவகிரி பகுதியில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகிரி:

சிவகிரி பகுதியில் கடைகள் புற்றீசல் போல் ஆங்காங்கே முளைத்துள்ளன. முக்கிய பகுதிகளில் தள்ளுவண்டிகளும், நடைவியாபாரிகளும் ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். 

மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வாகனங்களும், கல்லூரி வாகனங்களும், தொழிற்சாலை பணி-யாளர்கள் வாகனங்களும் பஸ்நிலையத்தின் வெளிப்புறங்களில் வாகனங்களை நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.

 செங்கல் லோடு லாரிகள் அதிகளவில் வந்து செல்வதாலும், விவசாய வேலைகளுக்கு வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி வேலையாட்களை ஏற்றி இறக்கி செல்வதாலும், வணிக நிறுவனங்கள் தனது சரக்கு வாகனங்களை நிறுத்தி சரக்குகளை ஏற்றி, இறக்கி செல்வதாலும், போக்குவரத்து நெரிசலில் சிவகிரி சிக்கித்தவிக்கிறது.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்கள் பஸ்நிலையம் வராமல் பழைய போலீஸ்  நிலையம் அருகே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். 

ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மாணவர்கள் பள்ளி செல்லும் நேரங்க ளிலும், பள்ளியை விட்டு வீட்டுக்கு செல்லும் வேளையிலும் போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News