உள்ளூர் செய்திகள்
மக்கள் நீதி மய்யம்

15 மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆட்களை தேடும் கமல் கட்சி

Update: 2022-04-28 06:38 GMT
கமல்ஹாசன் கட்சிக்கு 15 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆட்கள் தேவை என அறிக்கை வெளியாகி இருக்கிறது.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி மாற்று கட்சிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து வகையான தேர்தல்களிலும் கமல்ஹாசன் கட்சி தொடர் தோல்வியை சந்தித்ததையடுத்து கட்சியினர் பலர் ஓட்டம் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சிக்கு 15 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆட்கள் தேவை என அறிக்கை வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கையில் கூறி இருப்பதாவது:

மக்களுக்கான தேவைகளை சேவைகளாகச் செய்திட நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய களம், மக்கள் நீதி மய்யம். அதன் மூலம் மக்களுக்கு சேவையாற்றிட மய்ய உறவுகள் எழுச்சி கொண்டு வருவதைப் பார்க்கையில் ‘மக்கள் நம் பக்கம்..... நாம் மக்கள் பக்கம்’ என்பது தெளிவாகிறது. பல்வேறு பட்ட காலச் சூழ்நிலைகளிலும் நம் மய்ய உறவுகள் மக்களுக்கான சமூகத் தேவைகளை சடுதியில் பூர்த்தி செய்து வருகின்றனர் என்பதை மய்ய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் அறிவர்.

உங்கள் மாவட்ட மக்களுக்கு நீங்களும் சேவையாற்றிட உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. இதன் மூலம் உங்களுக்கான ஆளுமையை, ஆளும் அரசும் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் கீழ்க்காணும் 15 மாவட்டச் செயலாளர்களுக்கான விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பைப் பயன்படுத்த விருப்பமுள்ளவர்கள், கீழ்க்காணும் இணைப்பில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய மாவட்ட செயலாளர் பதவிக்கான 15 மாவட்டங்கள்:

தூத்துக்குடி திருச்செந்தூர்.

பதவிக்கான விண்ணப்ப இணைப்பு: https://maiamconnect.com/newapplication.php.
Tags:    

Similar News