உள்ளூர் செய்திகள்
.

விசைத்தறி தொழில் நசிவால் வெளியூர் வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Update: 2022-04-24 08:39 GMT
விசைத்தறி தொழில் நசிவால் வெளியூர் வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
குமாரபாளையம்:

குமாரபாளையம் விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட பல தொழில்கள் மிகுந்த நகரம். பல வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு இங்கு உற்பத்தியாகும் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யபட்டு வந்தது. 

சில ஆண்டுகளாக நூல் விலை உயர்வு, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தொழில்கள் நலிவடைந்தன. 

இதனால் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வந்த பல ஆயிரம் பேர் திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு, பெருந்துறை உள்ளிட்ட பல ஊர்களுக்கு வாழ்வாதாரம் தேடி வேலைக்கு சென்று கொண்டுள்ளனர். 

தொழில் நிறுவன பஸ், வேன் மூலம் ஆட்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். மீண்டும் வேலை முடிந்து அதே வாகனத்தின் மூலம் குமாரபாளையத்தில் கொண்டு வந்து விட்டு விடுவதால், வேலைக்கு செல்வோருக்கு எளிதாக உள்ளது. 

இதனால் குமாரபாளையத்தில் வைண்டிங் மெசினில் நூல் ஓட்டவும், பாவு ஓட்டவும், தார் ஓட்டவும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
Tags:    

Similar News