உள்ளூர் செய்திகள்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான மாநாடு வரும் 25,26-ல் நடைபெறுகிறது

Published On 2022-04-23 08:44 GMT   |   Update On 2022-04-23 09:54 GMT
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டில், வளர்ந்து வரும் புதிய உலகின் இந்தியாவின் பங்கு மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகத் தலைவராக இருப்பதற்கான யோசனைகள் மற்றும் செயல் திட்டங்கள் விவாதிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், மாநாட்டில் யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

இதையும் படியுங்கள்.. கலெக்டர் அலுவலகங்களில் போலி சான்றிதழை கண்டறிய ஏற்பாடு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Tags:    

Similar News