உள்ளூர் செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பயிற்சி

Published On 2022-04-22 07:02 GMT   |   Update On 2022-04-22 07:02 GMT
பயிற்சி முகாமில் அனைத்து கவுன்சிலர்களுக்கும் கையேடு வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள் வார்டுகளில் ஆற்ற வேண்டிய பணிகள், மக்களை சந்திக்கும்போது தெரிவிக்கும் புகார்களை களைய வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
சென்னை:

தமிழகத்தில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்களுக்கு சென்னையில் 2 கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு கவுன்சிலர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட்டது. மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் கவுன்சிலர்கள் செயல்பாடு, கடமைகள் குறித்து மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் துணை கமி‌ஷனர்கள் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமில் அனைத்து கவுன்சிலர்களுக்கும் கையேடு வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள் வார்டுகளில் ஆற்ற வேண்டிய பணிகள், மக்களை சந்திக்கும்போது தெரிவிக்கும் புகார்களை களைய வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் என பல்வேறு நிலைகளில் ஒவ்வொருவரும் எவ்வாறுசெயல்பட வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

Tags:    

Similar News