உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மத்திய அரசு திட்ட வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

Update: 2022-04-20 10:29 GMT
ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அந்தந்த பயனாளிகளே வீடுகளை கட்டிக்கொள்ள வேண்டும்.
அவிநாசி:

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு வீடு வசதி ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. மாநில அரசின் நிதி பங்களிப்புடன் குறைந்தபட்சம் 260 சதுர அடியில் வீடு கட்டிக்கொள்ள 1.70 லட்சம் ரூபாய், முழு சுகாதார திட்டத்தில் கழிப்பறை கட்ட 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அந்தந்த பயனாளிகளே வீடுகளை கட்டிக்கொள்ள வேண்டும். இதற்காக 90 நாளுக்கு 273 ரூபாய் வீதம் 24 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 2.06 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2018-2019 , 2019-2020ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பலரும் பல்வேறு காரணங்களால் வீடுகளை கட்டாமல் உள்ளனர். 

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களின் கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நிலுவையில் உள்ள வீடுகளை விரைவாக முடிக்க பயனாளிகளை அறிவுறுத்த வேண்டும் என திருப்பூர் ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News