உள்ளூர் செய்திகள்
விஜயகாந்த்

இளையராஜாவை மேலும் விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது - விஜயகாந்த்

Update: 2022-04-19 13:54 GMT
இளையராஜா பா.ஜ. க.வை சார்ந்தவரல்ல, தமிழக மக்களின் அன்பை பெற்றவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை:

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தைச் சொல்லியிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்றைக்கும் அவரவர்கள் துறையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதேபோல தான் இங்கு யாரையும் யாருடனும் ஒப்பிட்டுப் பேச முடியாது. அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். 

இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக்கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News