உள்ளூர் செய்திகள்
திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

பாளை சிவன் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் தெப்ப உற்சவம்

Update: 2022-04-17 09:30 GMT
பாளை சிவன் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மாலை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
நெல்லை:

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோமதியம்மாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோவில் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் தெப்ப உற்சவம் இன்று மாலை நடைபெறுகிறது.

இதையொட்டி மாநகராட்சி சார்பில் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடந்தது. தெப்பக்குளத்தை சுற்றிலும் ரூ.72 லட்சம் செலவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் பல்வேறு பணிகள் நடந்தது. இதனால் நீராழி மண்டபம், தெப்பத்தை சுற்றி உள்ள பகுதிகள் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. தெப்ப உற்சவத்தையொட்டி மின் விளக்குகளால் தெப்பம் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

மின் விளக்கு அலங்காரத்துடன் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

தெப்ப உற்சவத்தையொட்டி இன்று காலை தெப்பக்குளம் அருகில் திருக்கழுங்குன்றம் சிவதாமோதரன், ராஜம்மாள் சங்கரன் குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து இன்று மாலை சித்திரை திருவிழா தெற்ப உற்சவம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News