உள்ளூர் செய்திகள்
பாளை சவேரியார் ஆலயத்தில் ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்த காட்சி.

நெல்லை மாவட்ட தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி

Update: 2022-04-17 08:55 GMT
ஈஸ்டர் பண்டிகையையொட்டி நெல்லை மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
நெல்லை:

சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்து  உயிர்த்தெழுந்த நிகழ்வு ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.   பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.  இதில் பங்கு தந்தையர் மற்றும் இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு-களாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் எளிமையான முறையில் அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்பட்டது.

தற்போது தொற்று குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி உள்ளதால் வழக்கமான உற்சாகத்துடன் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் தேவலாயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூ-பமாக நடைபெற்றது. பின்னர் பங்குத் தந்தை குமாரராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் பாளை புனித அந்தோணியார் ஆலயம், மேலப்பாளையம் தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரம் தூய மீட்பரின் ஆலயம்,  சாந்திநகர் குழந்தை ஏசு தேவாலயம்,  கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டை அந்தோணியார் தேவாலயம்  உள்ளிட்ட தேவாலயங்களிலும், வள்ளியூர், ராதாபுரம், அம்பை, நாங்குநேரி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ஆர்.சி., சி.எஸ்.ஐ.தேவலாயங்களில்  ஈஸ்டர் பண்டிகை சிறப்பு  வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News