உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

குளச்சல் அருகே மீன்பிடி தொழிலாளி பலி

Update: 2022-04-17 08:38 GMT
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மீன்பிடி தொழிலாளி பலியானார்.
கன்னியாகுமரி:

குளச்சல் அருகே கோடிமுனை பிரண்ட்ஸ் காலனியை சேர்ந்தவர் ஆன்றனி. இவரது மகன் நிதோன் சித்ராஜ் (வயது 32). கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று மாலை நிதோன் சித்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் மண்டைக்காட்டில் இருந்து கோடிமுனை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிள் பின்னால் அவரது நண்பர் சோபி (34) அமர்ந்திருந்தார். மோட்டார் சைக்கிள் கொட்டில்பாடு மெயின் ரோட்டில் செல்லும்போது தெருவில் இருந்து மெயின் ரோட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழந்தை ஏசு காலனியை சேர்ந்த பிரவின் (29) என்பவர் எதிர்ப்பாராமல் நிதோன் சித்ராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். 

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தகவலறிந்த த.மு.மு.க. ஆம்புலன்ஸ் 3 பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தது. நிதோன் சித்ராஜை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

படுகாயமடைந்த சோபி அதே மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிரவின் ராஜாக்கமங்கலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் பிரவின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News