உள்ளூர் செய்திகள்
குத்துவிளக்கு பூஜை

பாலைவனநாதர் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை

Update: 2022-04-17 08:10 GMT
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
பாபநாசம்:

பாபநாசம் திருப்பாலைத்துறையில் தவள வெண்ணகை அம்பாள் உடனுறை பாலைவனநாதர் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. 

நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு உலக மக்கள் நலமோடு வாழ வேண்டியும், குடும்பப் பிரச்சனைகள் நீங்கவும், குடும்பங்களில் சகல ஐஸ்வர்யங்களுடன் மகாலட்சுமி குடியேறவும் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறைந்திடவும் உலக அமைதிக்காகவும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இப்பூஜையில் பாபநாசம், திருப்பாலத்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 108 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். கும்பகோணம் திருவடி குடில்சுவாமிகள் பக்தி சொற்பொழிவாற்றினார்.

 நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார் தக்கார் லட்சுமி, பாபநாசம் இறைப்பணி மன்ற தலைவர் குமார், கங்காதரன் குருக்கள், திருக்கோவில் பணியாளர் சங்கரமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News