உள்ளூர் செய்திகள்
தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

திம்மநாயக்கன்பட்டியில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-04-17 05:59 GMT   |   Update On 2022-04-17 05:59 GMT
நாமக்கல் அருகே திம்மநாயக்கன்பட்டியில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
ராசிபுரம்:

ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சாமியை வழிப்பட்டனர். மேலும் கோவிலில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து சாமியை வழிபட்டனர்.

மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தேரடி நிலையத்திலிருந்து புறப்பட்ட தேரில் தர்மராஜா திரவுபதி அம்மன் உற்சவர் சிலைகள் உள்பட 14 சாமி சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன.

இந்த தேர் திம்மநாயக்கன்பட்டியில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News