உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு

Update: 2022-04-16 10:03 GMT
நெல்லை பழைய பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தென்காசி வாலிபர் இசக்கிராஜ் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:

தென்காசி மாவட்டம் வடகரையை சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் இசக்கிராஜ் (வயது25). இவர் தனது தந்தையுடன் வாழைக்காய் வியாபாரம் செய்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(26). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் திருச்செந்தூர் செல்வதற்-காக முடிவு செய்துள்ளனர்.

இதற்காக ராஜேந்திரனின் மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் புறப்பட்டு சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை ராஜேந்திரன் ஓட்டிச்சென்றுள்ளார்.

நெல்லை  பழைய பேட்டை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் 2 பேரும் சாலையில் சரிந்து விழுந்தனர்.

இந்த விபத்தில் ராஜேந்திரனுக்கு வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இசக்கிராஜின் வலது கால் முறிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
Tags:    

Similar News