உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பீளமேட்டில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

Update: 2022-04-16 09:24 GMT
காந்திமாநகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கினார்.
கோவை: 

கோவை பீளமேடு அருகே உள்ள பெரிய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கார்த்தீஸ்வரி (வயது 36). 

இவர் அந்த பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்ததும் வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார். பின்னர் காந்திமாநகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கினார். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் கார்த்தீஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த 10 தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்கு வாலிபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து கார்த்தீஸ்வரி பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 10 பவுன் தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 
Tags:    

Similar News