உள்ளூர் செய்திகள்
வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ.

மேற்கு வங்காளத்தில் பாலியல் விவகாரத்தில் மாணவி மரணம்: உண்மை கண்டறியும் குழுவில் வானதி-நடிகை குஷ்பு

Update: 2022-04-15 11:21 GMT
மேற்கு வங்காளத்தில் 14 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் 14-வயது மாணவி ஒருவர் கடந்த வாரம் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். வீடு திரும்பிய அந்த மாணவி கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணையில் அந்த மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் மகனை கைது செய்தனர்.

இது தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவை பா.ஜனதா மேலிடம் நியமித்துள்ளது. இந்த குழுவில் வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகை குஷ்பு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் உத்தரபிரதேச மந்திரி பேபிராணி மவுரியா, ரேகாவர்மா எம்.பி. மேற்கு வங்க எம்.எல்.ஏ ஸ்ரீரூபா மித்ரா சவுத்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
Tags:    

Similar News