உள்ளூர் செய்திகள்
மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடம் தயார் நிலையில் உள்ளது.

வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க வேண்டாம்

Update: 2022-04-15 11:19 GMT
வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க வேண்டாம் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடந்து வருகிறது. வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு, குறிப்பிடத் தக்க அம்சமாகும். இந்த நிகழ்வு மதுரை வைகை ஆற்றில் நாளை நடக்கிறது. 

மதுரை வைகை ஆற்றில் கடந்த 10-&ந்தேதி வரை தண்ணீர் வரத்து இல்லை. கள்ளழகர் வைகை ஆற்றுக் குள் இறங்க ஏதுவாக, அணையில் இருந்து 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவது என்று தமிழக அரசு முடிவு செய்தது.

 தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து முதல்கட்டமாக 11, 12-&ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு மட்டும் 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது அடுத்த சில நாட்களில் மதுரை வைகை ஆற்றுக்கு வந்து சேர்ந்தது. அதன்பிறகு வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைக் கப்பட்டு வருகிறது.

வைகை அணையில் இருந்து மதுரை வைகை ஆற்றுக்கு இது வரை 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.
மதுரை வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடக்கும் சமயத்தில் நீர் வரத்து அதிகரித்திருப்பது திகைப்பை ஏற் படுத்தி உள்ளது.

இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் கூறுகையில், “மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம்“ என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
Tags:    

Similar News