உள்ளூர் செய்திகள்
சித்தர் பீடத்தில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்ற காட்சி

தூத்துக்குடி சித்தர் பீடத்தில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

Update: 2022-04-15 09:29 GMT
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரிலுள்ள மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் சித்தர் பீடத்தில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தூத்துக்குடி:

 தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரிலுள்ள மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

 புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, பக்தர்களின் வாழ்வில் கடன் சுமைகள்  நீங்கிட வேண்டியும், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பொங்கிடவும், உலகமக்கள் யாவரும் கொரோனா போன்ற கொடிய நோய் தாக்குதல்கள் இல்லாத நிலையோடு நலமாக, வளமாக வாழவேண்டியும்,

 பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழித்திடவும், தொழில்வளம் சிறந்திடவும் வேண்டி  சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு யாகவழிபாடுகள் நடைபெற்றது.

 ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், மங்களம் தரும் சனீஸ்வரர், ஆஞ்சநேயர், சரஸ்வதி, லெட்சுமி தேவியருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், தேன், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன் தமிழில் அர்ச்சனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

 பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News