உள்ளூர் செய்திகள்
.

சேமிப்பு கிடங்குகளுக்கு மாத வாடகை

Update: 2022-04-15 09:27 GMT
விளைபொருட்களை சேமிப்பு கிடங்குகளில் மாத வாடகைக்கு வைத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம்,


சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 138 கிடங்குகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. 

இவற்றின் கொள்ளளவு 19,100 டன் ஆகும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விவசாய விளை பொருட்களை கிடங்குகளில் வைத்து குறைந்த வட்டியில் தானிய ஈட்டுக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், விவசாய மக்கள் விவசாய பொருட்களை குறைந்த மாத வாடகைக்கு சேமித்து வைத்து விலையேற்ற காலங்களில் விற்பனை செய்து கொள்ளலாம். மாத வாடகையாக 50 கிலோவுக்கு ரூ.2-ம், 75 கிலோவுக்கு ரூ.3-ம், 100 கிலோவுக்கு ரூ.4-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், வணிகர்கள் மதிப்பு கூட்டப்பட்ட விவசாய விளை பொருட்களையும் கிடங்குகளில் மாத வாடகைக்கு வைத்து பயன்பெறலாம் என்று சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

 
Tags:    

Similar News