உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வாலிபர் தற்கொலை

Update: 2022-04-15 08:07 GMT
தக்கலை அருகே வாலிபர் தற்கொலை
கன்னியாகுமரி:

தக்கலை அருகே முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 38). இவர் சந்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.
அஜித்குமார்  முத்தலக்குறிச்சியில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். சமீபத்தில் புதிய வீடு கட்டி குடியேறினார். 

வீடு கட்டும் போது பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஸ்டுடியோ தொழிலில் பெரிய வருமானம் இல்லாததால் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு சென்று கதவை பூட்டினார். 
வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் மனைவி சந்தியா சந்தேகம் அடைந்து கதவை தட்டியுள்ளார். 

கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினரிடம்  கூறியுள்ளார். அருகில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அஜித்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் சந்தியா புகார் செய்தார். 

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைபற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மரணமடைந்த அஜித்குமாருக்கு ரம்யா என்ற மகளும் ரதீஷ் என்ற மகனும் உள்ளனர். 
Tags:    

Similar News