உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.1கோடி இழப்பீடு - உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்

Published On 2022-04-14 07:36 GMT   |   Update On 2022-04-14 09:23 GMT
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் காரிய பள்ளி கிராமத்தில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு மாறாக கெயில் நிறுவனம் விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் அமைப்பதற்கு முனைந்துள்ளது.
பல்லடம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பெரிய பள்ளி கிராமத்தில் கெயில் நிறுவனம் விவசாய விளை நிலங்கள் வழியாக குழாய் அமைப்பதற்கு அளவீடு பணி மேற்கொண்டது .

இதனை எதிர்த்து விவசாயிகள் போராடி வந்த நிலையில் கணேசன் என்ற விவசாயி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து எரிவாயு திட்டத்தை ரோடு ஓரங்களில் மட்டுமே அமைக்கவேண்டும். 

விவசாய விளை நிலங்களில் அமைக்கக்கூடாது. தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர் .

இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் காரிய பள்ளி கிராமத்தில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு மாறாக கெயில் நிறுவனம் விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் அமைப்பதற்கு முனைந்துள்ளது.

ஆதரவற்ற விவசாயிகள் அறவழியில் நின்று அதை எதிர்த்து இரண்டு நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இன்னும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 65 சென்ட் நிலம் மட்டுமே கொண்ட சாதாரண சிறு விவசாயி கணேசன் என்பவர் தன் நிலம் பறிபோவதை தாங்க முடியாமல் போராட்டம் நடக்கும் போதே அருகில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது மிகப்பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது உயிரிழந்த விவசாயி கணேசனின் உடலை பேருந்து நிலையத்தின் முன்பு வைத்து விவசாயிகள் தற்பொழுது மாபெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அராஜக செயலுக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். 

மேலும் தமிழக அரசு ஏழை விவசாயி கணேசன் சாவுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு அவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு இதுகுறித்து தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பாகவும் உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பாகவும் கேட்டு கொள்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News