உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவை வழியாக 2 சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2022-04-12 10:01 GMT   |   Update On 2022-04-12 10:01 GMT
கோடைகால விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கம்
கோவை, 
கோடைகால விடுமுறை கூட்ட நெரி சலை தவிர்க்க, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக நெல்லை&- மேட்டுப்பாளையம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சேவை சிறப்பு ரெயில் இயக்க தெற்குரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. 
 
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது:& 
நெல்லை& மேட்டுப்-பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06030) ஏப்ரல் 21&ந் முதல் ஜூன் 30&ந்  தேதி வரை வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளை யம் வந்து சேரும். 
அதேபோன்று மேட்டுப்-பாளையம்& -நெல்லை வாராந்திர சேவை (வண்டி எண்: 06029) சிறப்பு ரெயில் ஏப்ரல் 22&ந் தேதி முதல் ஜூலை 1&ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்று சேரும்.
 
இந்த ரெயில்கள் சேரன்-மகாதேவி, அம்பா சமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். 
இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 
7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட்-டுள்ளது.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 
சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:&
கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்-&எர்ணாகுளம் இடையே இயக்கப்படுகிறது.
இந்த வாராந்திர சிறப்பு ரெயில் (06019) வரும் 22-&ந் தேதி முதல் ஜூன் 24-&ந் தேதி வரை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். 
 
இதேபோல, எர்ணா குளம்-தாம்பரம் இடையிலான வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (06020) வரும் 24-&ந் தேதி முதல் ஜூன் 26-&ந் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். 
இந்த ரெயில்கள், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்-தனூர், திருப்-பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்-பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்-களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News