உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்குதல்

பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் மின்சாரம் தாக்கி பலி

Update: 2022-04-11 09:12 GMT
பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

பொன்னேரி அடுத்த ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் மதி (வயது31). புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட துணைத்தலைவராக இருந்தார். அவர் புளிக்குளம் பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை அவர் ஒரு வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி மதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News