உள்ளூர் செய்திகள்
கவிஞர் வைரமுத்து

இதற்கு மேலும் 'இந்தி'யா? தாங்குமா இந்தியா?- வைரமுத்து கேள்வி

Published On 2022-04-09 05:05 GMT   |   Update On 2022-04-09 07:52 GMT
இந்தி மொழி திணிப்பு தொடர்பாக கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
டெல்லியில் நேற்று பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்றும், வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என்று கூறினார்.

அமித்ஷாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில்,

வடக்கே வாழப்போன தமிழர்
இந்தி கற்கலாம்
தெற்கே வாழவரும் வடவர்
தமிழ் கற்கலாம்

மொழி என்பது
தேவை சார்ந்ததே தவிர
திணிப்பு சார்ந்ததல்ல

வடமொழி ஆதிக்கத்தால்
நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம்

இதற்குமேலும் இந்தியா?
தாங்குமா இந்தியா?

இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. நாளை கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
Tags:    

Similar News