உள்ளூர் செய்திகள்
வளர்பிறை சிறப்புபுஜை நடந்த காட்சி.

சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜை

Published On 2022-04-08 10:01 GMT   |   Update On 2022-04-08 10:18 GMT
கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோடிசக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்து வைத்தார்.

விழாவில் திருச்-செந்தூர் பாத யாத்திரை குழு முருக பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
Tags:    

Similar News