உள்ளூர் செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றம்

தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்கள் ஆசிரியர் பணியை தொடர முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்

Published On 2022-04-07 10:44 GMT   |   Update On 2022-04-07 15:31 GMT
அறிவு, திறமை கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும் என்றும் தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் கருத்து தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் பணிப்புரிய ஆசிரியர்கள் கட்டாயம் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களும் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால், தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெறாதவர்களின் ஊதிய உயர்வை நிறுத்தியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்,  இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையில் வந்தது. அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.

மேலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுமாறு அறிவித்து ஏற்கனவே 12 ஆண்டு கடந்தும் தகுதிபெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என்றும்  ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது குறித்த அரசின்விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, கல்வி உரிமைச்சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல் ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அறிவு, திறமை கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும் என்றும் தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் கருத்து தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்.. ஐகோர்ட்டு தீர்ப்பு மிகப்பெரிய அங்கீகாரம்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
Tags:    

Similar News