உள்ளூர் செய்திகள்
குற்றாலம் அருகே மலைப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்த காட்சி.

குற்றாலம் அருகே மலையில் எரிந்த ‘தீ’ அணைக்கப்பட்டது

Update: 2022-04-05 09:03 GMT
குற்றாலம் அருகே மலையில் ‘தீ’ பற்றி எரிந்தது. இதையடுத்து கடையம் வனச்சர களப்பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடையம்:

அம்பை வனக்கோட்டம் கடையம் வனச்சரக எல்லைக்குட்பட்ட மத்தாளம்பாறை பீட் கெண்டி, ஊத்து பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ளது.

இந்த மலையில் நேற்று மாலை பயங்கரமாக இடி-மின்னல் காணப்பட்டது. இதன் காரணமாக மலையில் காய்ந்து கிடந்த சருகுகளில் திடீரென தீப்பிடித்தது.

 தொடந்து குற்றாலம் வரையிலும் காய்ந்து கிடந்த புற்களில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த கடையம் வனச்சர களப்பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 மேலும் தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்களும் 4 குழுக்களாக செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சில மணி நேரத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
Tags:    

Similar News