உள்ளூர் செய்திகள்
பெட்ரோல் பங்க்( கோப்பு படம்)

பெட்ரோல் விலை இன்றும் உயர்வு, டீசல் விலை 100 ரூபாயை தாண்டியது

Published On 2022-04-05 01:11 GMT   |   Update On 2022-04-05 01:11 GMT
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள், சரக்கு வாகன ஒட்டுநர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
 சென்னை:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன.

137 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 22ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டன. 

அதன் தொடர்ச்சியாக  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 

இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்த்தப்பட்டு, 110 ரூபாய் 09 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை 76 காசுகள் உயர்த்தப்பட்டு 100 ரூபாய் 18 காசுகளுக்கு விற்பனையாகிறது.  டீசல் விலை முதன்முறையாக ஒரு லிட்டர் நூறு ரூபாயை தாண்டியுள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால், இருசக்கர வாகன ஓட்டிகள், சரக்கு வாகன ஒட்டுனர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Tags:    

Similar News