உள்ளூர் செய்திகள்
டி இமான், சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் மனைவிக்கு எதிராக இசையமைப்பாளர் இமான் வழக்கு

Published On 2022-04-04 21:40 GMT   |   Update On 2022-04-04 21:40 GMT
தனது குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப முன்னாள் மனைவி மோனிகா முயற்சிப்பதாக டி.இமான் தமது மனுவில் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் கடந்த 2018-ம் ஆண்டு தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எனது 2 குழந்தைகளின் பாஸ்போர்ட் என்னிடம் உள்ளன. ஆனால் அந்த பாஸ்போர்ட்டுகள் தொலைந்து விட்டதாகக் கூறி மோனிகா புதிய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். இது சட்டவிரோதம். 

எனவே, என் குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு மனு கொடுத்தேன். ஆனால்,உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல், அவ்வாறு ரத்து செய்ய முடியாது என்று அதிகாரி கூறினார். 

என் குழந்தைகளை நான் சந்திக்க கூடாது என்பதற்காக வெளிநாட்டுக்கு அவர்களை அனுப்ப மோனிகா இவ்வாறு செயல்படுகிறார். எனவே புதிய பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இது தொடர்பாக தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, மோனிகா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Tags:    

Similar News