உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கண்ணாடி வழங்கிய கமிஷனர்

பொன்னேரி அருகே போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கண்ணாடி

Update: 2022-04-02 10:29 GMT
போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கண்ணாடி, இரவு நேரங்களில் ஒளிரும் மேலங்கி ஆகியவற்றை ஆவடி போலீஸ் கமி‌ஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.
பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் கனரக வாகனங்கள் எண்ணூர் மீனவ குடியிருப்பில் செல்வதை தவிர்க்கும் வகையில் தடுப்பு அரண் அமைக்கப்பட்டது.

இதனை ஆவடி போலீஸ் கமி‌ஷனர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார். மீஞ்சூர் சுற்றுப்பகுதியில் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள தொப்பி, கூலிங் கண்ணாடிகளையும், இரவு நேரங்களில் ஒளிரும் மேலங்கி ஆகியவற்றையும் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கினார்.


Tags:    

Similar News