உள்ளூர் செய்திகள்
விழாவில் நகைகடன் தள்ளுபடி சான்றிதழை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய காட்சி.

தமிழகத்தில் விரைவில் மீனவர்களுக்கான சிறப்பு கூட்டுறவு வங்கி திறக்கப்படும்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2022-03-29 08:38 GMT   |   Update On 2022-03-29 08:38 GMT
தமிழகத்தில் விரைவில் மீனவர்களுக்கான சிறப்பு கூட்டுறவு வங்கி திறக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வேளாண் கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு கீழ் நகை கடன் வாங்கியவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளி களுக்கு நகைகளை வழங்கினார்.

இதில் 1,064 பயனாளி களுக்கு சுமார் ரூ.3.20 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் முதல்முறையாக மீனவர்களுக்கு என சிறப்பு கூட்டுறவு வங்கி விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்படும். தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து கால்நடை மருத்துவர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என கூறினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி,  மாவட்ட  கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் வளர்மதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும், வங்கி அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.  சங்க செயலாளர் எட்வின் தேவாசீர்வாதம் நன்றி கூறினார்.
Tags:    

Similar News