உள்ளூர் செய்திகள்
கைது

வலி நிவாரண மாத்திரைகளை கரைத்து போதை ஊசி விற்ற 6 பேர் கும்பல் கைது

Published On 2022-03-24 09:25 GMT   |   Update On 2022-03-24 09:25 GMT
தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜீவா என்ற பட்டதாரி வாலிபரை கஞ்சா, போதை மாத்திரை விற்ற வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை பகுதியில் உள்ள கல்லறைதோட்டம் பகுதியில் வாலிபர் சிலர் போதையில் ரகளையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் பிரான் வின் டேனி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று போதையில் இருந்த 6 பேர் கும்பலை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் சோதனை செய்தபோது போதை ஊசி செலுத்தி இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் சித்தூரில் இருந்து மலிவு விலையில் போதை மாத்திரைகளை வாங்கிவந்ததும், மருந்து கடைகளில் கிடைக்கும் வலிநிவாரண மாத்திரைகளை கரைத்து ஊசிகள் மூலம் போதைக்காக உடம்பில் ஏற்றுவதும் தெரிந்தது.

மேலும் போதை மாத்திரைகளை வாங்க வரும் இளைஞர்களையும் போதை ஊசி மூலம் செலுத்தி கொள்ள வற்புறுத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதையடுத்து சேத்துபட்டு பகுதியை சேர்ந்த ஸ்டாலின், பழைய வண்ணாரப்பேட்டை சையது அசார், கிழக்கு கல்லறை சாலை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்கிற கோழி உதயா, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ், வினோத், கார்த்திக் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள் மற்றும் போதைக்கு பயன்படுத்திய ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜீவா என்ற பட்டதாரி வாலிபரை கஞ்சா, போதை மாத்திரை விற்ற வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் ஜீவா, வாட்ஸ்-அப் குழு அமைத்து உயர்ரக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வசதி படைத்த இளைஞர்களுக்கும் துணை நடிகர்களுக்கும் கொரியர் மூலம் சப்ளை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News