உள்ளூர் செய்திகள்
சாலையில் நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்

கங்கைகொண்டானில் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்

Update: 2022-03-23 07:59 GMT
கங்கைகொண்டானில் இன்று சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு:

நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யக்கோரி இன்று திடீரென நெல் மூட்டைகளுடன் திரண்டனர்.

பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு கங்கைகொண்டான் நெடுஞ்சாலையில் நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அப்பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கங்கைகொண்டான் பஞ்சாயத்து தலைவர் கவிதா, கவுன்சிலர் மாலதி செல்லத்துரை, பதிநான்காம்பேரி விவசாய சங்க தலைவர் இலோசியஸ், அலங்காரபேரி விவசாய சங்க தலைவர் கொம்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. ஜெபராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாத்தை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News