உள்ளூர் செய்திகள்
திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-03-22 09:07 GMT   |   Update On 2022-03-22 09:07 GMT
திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி:

திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் சமூகப்பணித்துறை, தேசிய சேவைத்திட்டம் மற்றும் மனிதம் சமூகப்பணி மையம் இணைந்து மொபைல் அடிக்சன் என்னும் தலைப்பில்  ஸ்ரீ  சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

காவேரி மகளிர் கல்லூரி கணினி அறிவியல் துறையை சேர்ந்த உதவி பேராசிரியர் இலக்கியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயல்பாடுகள் மூலம் குழந்தைகளின் கவனத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வழிமுறைகளை கூறினார்.

செல்போன் மற்றும் தொலைபேசி பயன்படுத்துவதின் நன்மை, தீமைகளை பற்றி எடுத்துரைத்தார். 

இதில் மனிதம் சமூகப்பணி மையம் நிறுவனர் தினேஷ்குமார் மற்றும் காவேரி மகளிர் கல்லூரி சமூகப்பணித்துறை உதவி பேராசிரியர் ஆயிஷாமஞ்சு, முதுகலை மாணவிகள் இளவரசி, சரண்யா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News