உள்ளூர் செய்திகள்
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.1.12 கோடி

Update: 2022-03-22 04:21 GMT
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது.
திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு திருத்தணிக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது. இதற்கு கோவில் இணை ஆணையர் செயல் அலுவலர் பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். உதவி ஆணையர் ரமணி முன்னிலை வகித்தார். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் 21 நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 12 லட்சத்து 28 ஆயிரத்து 857 ரூபாய் வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 645 கிராம், வெள்ளி 6,950 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.
Tags:    

Similar News