உள்ளூர் செய்திகள்
தென்னை வளர்ச்சி குறித்து மாணவிகள் பயிற்சி அளித்த காட்சி.

சங்கரன்கோவில் அருகே தென்னை வளர்ச்சிக்கான பயிற்சி

Published On 2022-03-21 09:55 GMT   |   Update On 2022-03-21 09:55 GMT
சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களை பெற்று வருகின்றனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங் களைப் பெற்று வருகின்றனர். 

முனைவர் குமார் மேற்பார்வையில் மணலூர் கிராமத்தில் தென்னை டானிக்கை பயன்படுத்தும் முறை குறித்து மாணவிகள் செய்து காட்டினர். 

தென்னை டானிக்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பற்றி விவரிக்கப்பட்டது. இந்த தென்னை டானிக் ஆனது குறிப்பாக நுண் ஊட்டச்சத்துக்களை தென்னை மரத்திற்கு வழங்குவதற்காக பயன்படகூடியதாகும். 

இந்த டானிக்கின் ஊட்டச் சத்துத்திறன்கள் பற்றி மட்டுமின்றி அதன் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன்கள் குறித்தும் மாணவிகளான  கீர்த்தனா, ர. கீர்த்தனா,  கீர்த்திமதி,  பிரியதர்ஷினி,  ராஜதிவ்யா,  வீரலெட்சுமி, விகாசினி,  யோக பரமேஸ்வரி விவரித்தனர்.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Tags:    

Similar News