உள்ளூர் செய்திகள்
மாநாட்டில் ஆங்கிலிக்கன் திருச்சபை சேர்மன் பேராயர் மார்ட்டின் பேசிய காட்சி.

கிறிஸ்தவ போதகர்கள் மாநாடு

Update: 2022-03-21 09:54 GMT
திருச்சியில் இன்று ஐ.சி.எப். பேராயம் சார்பில் கிறிஸ்தவ போதகர்கள் மாநாடு நடைபெற்றது.
திருச்சி:

திருச்சி  ஐ.சி.எப். பேராயம் மற்றும் ஜே.கே.சி. அறக்கட்டளை சார்பில் கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாடு திருச்சி அருண் ஓட்டலில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. மாநாட்டிற்கு ஐ.சி.எப். பேராயர் பா.ஜான்ராஜ்குமார் தலைமை தாங் னார்.

மாநில செயலாளர் ஜான் சாமுவேல், திருச்சி&தஞ்சை மண்டல தலைவர் ஆயர் ஜேம்ஸ் ஈஸ்டர்ராஜ், நெல்லை மாவட்ட பேராய தலைவர் சாமுவேல் ராஜ்குமார், ஹோலி  மிராக்கிள் தேவலாலய பேராயர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.சி.எப். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருள் வரவேற்றார்.

இதில் தென்னிந்திய திருச்சபை திருச்சி&தஞ்சை திருமண்டல பேராயர் எம்.சந்திரசேகரன்  மாநாட்டை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஆங்கிலிக்கன் திருச்சபை சேர்மன் பேராயர் மார்ட்டின், சென்னை, மதுரை அரவணைக்கும் கரங்கள் அறக்கட்டளை பேராயர் நோவா, கிறிஸ்தவ விசுவாச ஊழியர் ஐக்கியம் நிறுவனர் ஆயர் ஜேம்ஸ்பாண்டியன்,  சி.எஸ்.ஐ. நாசரேத் பேராய ஆயர் டேவிட் ஞானையா,

சிறுபான்மை மக்கள் ஐக்கியம் தலைவர் பி.அந்தோணிசாமி, தென்காசி மாவட்ட பேராய தலைவர் டேனியல் ராஜா, இ.எப்.சி.சி. பொதுச்செயலாளர்  டேவிட் பரமானந்தம், இந்திய பூரண சுவிசேஷ தேவசபை பேராயர் அன்பழகன் ஸ்டீபன், கர்நாடக பாதிரியார்  தனபால், கிறிஸ்தவ ஐக்கிய கூட்டமைப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் பாஸ்டர் ராஜன், விஜய்பாபு தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர்  கே.எஸ்.சுப்பையா பாண்டியன், திருச்சி வசந்தம் அரிமா சங்க தலைவர் வசந்தகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினநல அலுவலர் இரா.பார்த்திபன், ஓய்வு பெற்ற தாசில்தார் அப்துல் அஜீஸ், சென்னை கிறிஸ்துதாஸ் போவாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இதில் ஜே.கே.சி. அறக்கட்டளை கவுரவ தலைவர் ரவிசேகர், ஜான்ரோஸ், ஆயர்கள் சார்லஸ், டேனியல் ராஜரூபன், கிறிஸ்டோபர் ஜான், ஸ்டீபன்ராஜ், சாம் லாசரஸ், பெங்களூரு ஜோஸ் தாமஸ், விக்டர் பெர்னாண்டஸ், பாஸ்கர், சேவியர், சகாய ராஜ்,  இருதயராஜ், சந்திரமோகன், பால்ஜெயக்குமார், மரிய ஸ்டீபன்,  நெல்லை மற்றும் தென்காசி போதகர்கள் அலெக்ஸ்  சுந்தர்ராஜ், ஜேசுராஜன், சாம்பால்ராஜ், பிரேம்குமார் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில்  திருச்சி மாவட்ட ஐ.சி.எப். தலைவர் ஜான் டோமினிக் நன்றி கூறினார்.
Tags:    

Similar News