உள்ளூர் செய்திகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தமிழக நிதிநிலை அறிக்கை மக்களுக்கு ஏமாற்றமே- தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Published On 2022-03-19 10:33 GMT   |   Update On 2022-03-19 10:33 GMT
2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் தருகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் வாக்குறுதிகள், அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு குறித்தும் அறிவிப்பு எதுவும் இல்லை என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Tags:    

Similar News