உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ராதாபுரம் பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக்கூடாது-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

Published On 2022-03-14 10:46 GMT   |   Update On 2022-03-14 10:46 GMT
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நெல்லை:

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக் களை வழங்கினர்.

மாதா கோவில் சுந்தரலிங்கம் தலைமையில் ராதாபுரம் தாலுகா விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

இருக்கன்துறை பகுதியில் உள்ள கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். உதயத்தூர் பகுதியில் புதிய குவாரிகள் தொடங்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஏற்கனவே அனுமதி அளித்துள்ளோம். ஆனால் குவாரி அமைப்பதற்கான நடவடிக் கைகள் நடந்து வருகிறது.

எங்கள் பகுதியில் வேளாண் மை, கால்நடை பராமரிப்பு செய்து வாழ் வாதாரம் நடத்தி வருகிறோம். எனவே ராதாபுரம் பகுதியில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக்கூடாது. பழைய குவாரிகளை அகற்றுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்லிடைக்குறிச்சி பகுதி மக்கள் கொடுத்த மனுவில், மூலச்சி ஊராட்சிக்குட்பட்ட பொன்மாநகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். சமீபத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் வழங்க பள்ளங்கள் தோண்டப்பட்டது.

ஆனால் அவை மூடப்படாமல் சாலைகளில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தது. மேலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. தற்போது 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டது.

நான்குநேரி வட்டம் பருத்திப் பாடை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க  தலைவர் கிருஷ்ணன் தலைமையில் கொடுத்த மனுவில் பருத்திப் பாடு கிராமம், தேவநேரியில் நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குத்தகை மூலம் பயிர் சாகுபடி செய்து வருகிறோம்.

ஆனால் தற்போது செந்தாழை நோய் தாக்குதலால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே குத்தகை பணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News