உள்ளூர் செய்திகள்
டிடிவி தினகரன்

அ.ம.மு.க. 5ம் ஆண்டு தொடக்க விழா- டி.டி.வி.தினகரன் 15ந்தேதி கொடியேற்றுகிறார்

Update: 2022-03-12 04:28 GMT
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று கொண்டாடப்பட இருக்கிறது.

இதையொட்டி அன்றைய தினம் காலை 10:30 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலக வளாகத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கழக கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களோடு தொடக்க விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார் என்று அ.ம.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News