உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கள் மீதான தடையை நீக்கி பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் - முதல்வருக்கு மனு

Published On 2022-03-11 07:07 GMT   |   Update On 2022-03-11 07:07 GMT
மது விலக்கு மற்றும் மதுக்கொள்கை குறித்து ஆய்வு செய்த எந்த குழுவும், கள்ளுக்கு தடை விதிக்க அரசுக்கு பரிந்துரைக்கவில்லை.
திருப்பூர்:

தமிழகத்தில் கள் மீதான தடையை நீக்கி பட்ஜெட்டில் அறிவிக்க, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, முதல்வருக்கு அனுப்பிய மனுவில், தென்னை மரத்திலிருந்து இயற்கையாக பெறப்படும் கள், போதை பொருள் இல்லை.

உலகளவில் பல நாடுகளிலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் கள் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளது. தமிழகத்தில் மட்டும் 33 ஆண்டுகளாக இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மது விலக்கு மற்றும் மதுக்கொள்கை குறித்து ஆய்வு செய்த எந்த குழுவும், கள்ளுக்கு தடை விதிக்க அரசுக்கு பரிந்துரைக்கவில்லை. கள்ளுக்கான தடை நீக்கப்பட்டால், தென்னை விவசாயிகள் பயன் பெறுவர். மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு வரும் பட்ஜெட்டில் கள் மீதான தடையை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News