உள்ளூர் செய்திகள்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளம

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-03-09 10:26 GMT   |   Update On 2022-03-09 10:26 GMT
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லை:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள்  கோவிலும் ஒன்றாகும்.

நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு, கஜபூஜை, கோபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின் கொடிப்பட்டம் எடுத்து வரப்பட்டது.

அதன் பின்னர் சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பங்குனி உத்திர திருவிழா கொடி யேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பின்னர் கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வேணுவனத்தில் சுவாமி நெல்லையப்பர் தோன்றிய வரலாற்று திருவிழா வருகிற 12-ந்தேதியும், ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா  18-ந் தேதியும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமராஜன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News