உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பிளஸ்-1 மாணவர்களுக்கு ஏப்ரல் 5ந்தேதி முதல் திருப்புதல் தேர்வு

Published On 2022-03-08 11:01 GMT   |   Update On 2022-03-08 11:01 GMT
மாணவர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் மூலம் அறிவுரை வழங்கப்படும்.
திருப்பூர்:

கடந்த  ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் அனைவரும் ‘ஆல்பாஸ்’ செய்யப்பட்டனர். மாவட்டத்தில் நடப்பாண்டு 13 ஆயிரத்து 97 மாணவர், 14 ஆயிரத்து, 920 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 017பேர் பிளஸ்-1 தேர்வு எழுத உள்ளனர்.

இவர்களுக்கு இதுவரை தேர்வுகள் நடக்காத நிலையில், ஏப்ரல் 5-ந்தேதி முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவருக்கு பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கும் முன் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. 

பிளஸ்-1 மாணவருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் மூலம் அறிவுரை வழங்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News