உள்ளூர் செய்திகள்
முதியோர் இல்ல சமூக தொடர்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

முதியோர் இல்ல சமூக தொடர்பு நிகழ்ச்சி

Published On 2022-03-06 09:41 GMT   |   Update On 2022-03-06 09:41 GMT
திருச்சி காவேரி கல்லூரி சார்பில் நடைபெற்ற முதியோர் இல்ல சமூக தொடர்பு நிகழ்ச்சியில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
திருச்சி:

திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் சமூகப்பணித்துறை, தேசிய சேவைத்திட்டம் மற்றும் ஹோப்தொண்டு நிறுவனம் இணைந்து மூத்த குடிமக்கள் மத்தியில் மன அழுத்தம் என்ற தலைப்பில் ஹோப் தொண்டு நிறுவனத்தின் முதியோர் இல்லத்தில் சமூக தொடர்பு   நிகழ்ச்சி நடைபெற்றது.

காஜாமலை பெண்கள் நலசங்கத்தின் குடும்பநல ஆலோசகர் ரோஸி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். தலைப்பின் மைய நோக்கமான மூத்த குடிமக்களின் மனதாலும், உடலாலும் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும், தனது குடும்ப உறுப்பினர்கள் தங்களை முதியவர் இல்லத்தில் கைவிடும்போது மூத்தகுடி மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது, அதை மாற்றிக்கொண்டு எப்படி தன்னை தயார்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார்.  

தலைப்பினை விறுவிறுப்பாக கொண்டு போகும் விதத்தில் சிறுகதையின் மூலமாக அனைவரையும் தனது பேச்சில் ஈர்த்தார். 

இதில் சமூக பணித்துறை தலைவரும்,  இணை பேராசிரியருமான முனைவர். மெட்டில்டா  புவனேஸ்வரி, முனைவர். ஆயிஷா மஞ்சு, சமூகப்பணி முதுகலை மாணவிகள் கிருத்திகா, ஜோதிஷ்டா, சோனியா மற்றும்  ஹேமலதா  நிகழ்ச்சி ஏற்பாடுகளை  செய்தனர். இதில் 15-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயனடைந்தனர்.
Tags:    

Similar News