உள்ளூர் செய்திகள்
.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரே நாளில் 27,129 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

Update: 2022-03-06 08:51 GMT
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் ஒரே நாளில் 27,129 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இதுவரை 22 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 7 லட்சத்து 30 ஆயிரத்து 668 பேருக்கு முதல் தவணையும், 8 லட்சத்து 92 ஆயிரத்து 276 பேருக்கு இரண்டாம் தவணையும் என மொத்தம் 16 லட்சத்து 29 ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் நேற்று 23-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. சுமார் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த தடுப்பூசி முகாமில் ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் நேற்று நடந்த முகாமில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

சிலர் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டனர். இதற்காக ஊரக பகுதியில் 865 மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் 205 என மொத்தம் 1,070 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தடுப்பூசி முகாம்களில் 23 ஆயிரத்து 334 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 34 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதற்கிடையே நேற்று 23-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 436 மையங்களில் நடைபெற்றது. முகாம் பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் நேற்று ஒரே நாளில் 3,795 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News