உள்ளூர் செய்திகள்
மீட்கப்பட்ட செல்போனை உரியவரிடம் போலீஸ் கமிஷனர் துரைக்குமார் ஒப்படைத்த காட்சி.

மாணவ-மாணவிகள் ஆன்லைன் விளையாட்டில் பண இழப்பை தடுக்க விழிப்புணர்வு-போலீஸ் கமிஷனர் பேட்டி

Update: 2022-03-03 10:31 GMT
மாணவ-மாணவிகள் ஆன்லைன் விளையாட்டில் பண இழப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் துரைக்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் மாயமாகி மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் கமிஷனர் துரைக்குமார்  இன்று ஒப்படைத்தார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

அறிமுகம் இல்லாத நபர்களிடம் பொதுமக்கள் தங்களின் ஏ.டி.எம். மற்றும் ஓ.டி.பி. விபரம் குறித்து தெரி விக்க கூடாது. செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பரிசு விழுந்து உள்ளதாக வரும் அறிவிப்புகளை நம்ப கூடாது.

மேலும் இதுகுறித்த குறுஞ்செய்தி தொடர்பான வெப்சைட்களுக்கு செல்ல வேண்டாம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீடியோ கால் மூலம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

செல்போன் திருட்டு, செல்போன்கள் மூலம் பண மோசடி உள்ளிட்ட சைபர் கிரைம் தொடர்பான புகார் களை பொதுமக்கள் 1930 என்ற இலவச எண் மூலம் உடனடியாக தெரிவிக்கலாம்.உடனுக்குடன் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

செல்போன்கள் மூலம் பண இழப்பை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு பண மோசடியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவர் மற்றும் வெளி நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர்.  அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

குற்ற சம்பவங்களை விரைந்து கண்டுபிடிக்க மாநகர காவலில் கூடுதல் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ-மாணவிகள் செல்போன் விளையாட்டு மூலம் பணம் இழப்பதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது துணை கமிஷனர்கள் டி.பி.சுரேஷ் குமார், கே.சுரேஷ்குமார், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு, சப்- இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ஜெயபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News