உள்ளூர் செய்திகள்
கேஎஸ் அழகிரி

சென்னையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை- கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

Update: 2022-02-27 07:56 GMT
தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று மாலை 4 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கவுரவ் ககாய், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப் பெருந்தகை ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

Tags:    

Similar News