உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஜோலார்பேட்டையில் ஒரு வாக்கு கூட பெறாத பா.ஜ.க. வேட்பாளர்

Published On 2022-02-23 08:46 GMT   |   Update On 2022-02-23 08:46 GMT
ஜோலார்பேட்டை பா.ஜ.க. வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறாமல் டெபாசிட்டை இழந்தார்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை நகராட்சி 18 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.

இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 7 வார்டுகளில் போட்டியிட்டனர். 

இதில் சொரங்கன் வட்டம் மற்றும் ஊசி நாட்டான் வட்டம் பகுதியான 10&வது வார்டில் ஜோலார்பேட்டை பா.ஜ.க. நகர செயலாளர் வெ.அசோகன் போட்டியிட்டு ஒரு வாக்கு கூட பெறவில்லை.

மேலும் போட்டியிட்ட 7 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர்.
Tags:    

Similar News