உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்புதல் தேர்வு ஒற்றை இலக்க மதிப்பெண் அளிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

Published On 2022-02-22 06:46 GMT   |   Update On 2022-02-22 06:46 GMT
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், திருத்தமில்லாத வகையில் திருத்தம் செய்திடவும், சரியாக பதில் எழுதவில்லை என்றாலும் ஒற்றை இலக்க மதிப்பெண்ணை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உடுமலை:

10-ம் வகுப்பு, பிளஸ- 2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகள் இடையே விடைத்தாள்கள் பரிமாற்றம் செய்து மதிப்பீடு செய்யும் பணி துவங்கியுள்ளது. 

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், திருத்தமில்லாத வகையில் திருத்தம் செய்திடவும், சரியாக பதில் எழுதவில்லை என்றாலும் ஒற்றை இலக்க மதிப்பெண்ணை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

விடைத்தாள் திருத்தும் பணியின் போது ஆசிரியர்கள் திருத்தி மதிப்பிடும் மதிப்பெண்கள், மறுகூட்டல் அல்லது மறு திருத்தத்துக்கு வரும்போது கூடுதலோ, குறைவோ ஏற்படாத வகையில் விடைத்தாள்களை திருத்த வேண்டும். 

அதேபோல், மாணவர்கள் வினாக்களுக்கு உண்டான பதிலை சரியாக எழுதவில்லை என்றாலும் தோல்வி அடையும் வகையில் மதிப்பெண் அளிக்க வேண்டாம். அதற்கு மாறாக ஒற்றை இலக்க எண் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News