உள்ளூர் செய்திகள்
முத்தரசன்

ஏழை மாணவர்கள் மருத்துவக்கல்வி படிக்கவே நீட் தேர்வை எதிர்க்கிறோம் - முத்தரசன்

Update: 2022-02-16 06:38 GMT
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் அது பயனற்றதாக இருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத்தலைவர் முத்தரசன் கூறியுள்ளார்.
மேலசொக்கநாதபுரம்:

போடி சக்கமநாயக்கன் பட்டியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத்தலைவர் முத்தரசன் பேசியதாவது:-

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் அது பயனற்றதாக இருக்கும். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தால் அவர்கள் எளிதாக எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்களை சந்தித்து வளர்ச்சி திட்டங்களை பெற்றுத்தருவார்கள். தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து நீட் எதிர்ப்பு தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்ததுதான் சாதனை. குரங்கனி டாப் ஸ்டேசன் சாலை பணிகளை அறிவித்தும் அ.தி.மு.க. ஆட்சியில் பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிரமமடைந்து வருகின்றனர். முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News