உள்ளூர் செய்திகள்
இறந்தவரை சாலையின் நடுவே புதைப்பு.

சுடுகாட்டை அகற்றியதால் இறந்தவர்களை சாலையின் நடுவே புதைக்கும் அவலம்

Published On 2022-02-15 13:10 IST   |   Update On 2022-02-15 13:10:00 IST
கொள்ளிடம் அருகே நான்குவழிச் சாலைக்காக சுடுகாட்டை அகற்றியதால் இறந்தவர்களை சாலையின் நடுவே புதைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடுக்காய்மரம் கிராமத்தில் நடுவே நான்கு வழிச்சாலை காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடுக்காய்மரம் கிராமத்தை சேர்ந்த சம்பந்தம் (78) என்பவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
 
அவரின் உடலை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாமல் நான்கு வழிச்சாலையின் நடுவே இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்தனர். இதுகுறித்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழக 
அரசு உடனடியாக கடுக்காய்மரம் கிராமத்தில் சுடுகாடு அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News